/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வௌியீடு
/
விநாயகர் சதுர்த்தி வழிகாட்டு நெறிமுறைகள் வௌியீடு
ADDED : ஆக 24, 2024 01:38 AM
பெ.நா.பாளையம்:விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளை பயன்படுத்தக் கூடாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருள்களாக பயன்படுத்த வேண்டும். அகற்றி, துவைத்து மீண்டும் உபயோகக் கூடிய அலங்கார துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
பிரசாத விநியோகத்துக்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுக்கள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும். பொறுப்புடன் குப்பையை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். என, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.