/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
/
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
கிராம கோவில்களில் பூச்சாட்டு திருவிழா ; பக்தர்கள் பரவசம்
ADDED : மே 03, 2024 01:06 AM

சூலுார்:சூலுார் சுற்றுவட்டார கோவில்களில் நடந்த பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
பங்குனி, சித்திரை மாதம் என்றாலே கிராமப்புற அம்மன் கோவில்களில் பூச்சாட்டு திருவிழா நடப்பது வழக்கம். சூலுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ராவத்தூர், முத்துக்கவுண்டன் புதூர், சூலுார், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் விழா பக்தி பரவசத்துடன் நடந்தது.
ராவத்தூர் கண் தந்த மாரியம்மன் கோவிலில், கடந்த, 15ம் தேதி திருவிழா துவங்கியது. பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். வேலவன் காவடி குழுவின் காவடியாட்டம்,கலை வள்ளி கும்மி குழுவினரின் வள்ளி கும்மியாட்டம், சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் நடந்தது. நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் கிட்டாம்பாளையம் கரிய காளியம்மன் கோவிலில் நடந்த பூச்சாட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.
முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவில் மற்றும் சூலுார் பெரிய மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது.