/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா வழிகாட்டுதலுக்கு 'கியூ.ஆர்., குறியீடு' வரைபடம்
/
சுற்றுலா வழிகாட்டுதலுக்கு 'கியூ.ஆர்., குறியீடு' வரைபடம்
சுற்றுலா வழிகாட்டுதலுக்கு 'கியூ.ஆர்., குறியீடு' வரைபடம்
சுற்றுலா வழிகாட்டுதலுக்கு 'கியூ.ஆர்., குறியீடு' வரைபடம்
ADDED : மே 09, 2024 02:39 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அதில், கோடை சீசனான ஏப்ரல், மே மாதத்தில் மட்டும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அதில், 80 சதவீதம் பேர் சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பல்வேறு மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஊட்டி வரும் சுற்றுலா பயணியர் எளிதாக உள்ளூர் சுற்றுலா மையங்களுக்கு செல்லும் வழியை அறிந்து கொள்ளும் வகையில், கியூ.ஆர்., குறியீடுடன் கூடிய வழிகாட்டி வரைபடத்தை, போலீசார் வெளியிட்டுள்ளனர்.
நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் நேற்று இதை வெளியிட்டு, சுற்றுலா பயணியருக்கு வரைபடத்துடன் கூடிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அதில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கான தகவல்கள் உள்ளன.
எஸ்.பி., சுந்தர வடிவேல் கூறுகையில், ''நீலகிரி வரும் சுற்றுலா பயணியர், லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து உள்ளூர் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், மூன்று வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 30,000 வரைபடங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சீசனுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, இவை வினியோகிக்கப்படும்,'' என்றார்.