/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் மரங்கள் விபரம் அறிந்து கொள்ள 'கியூ.ஆர்.,' கோடு
/
சிம்ஸ் பூங்காவில் மரங்கள் விபரம் அறிந்து கொள்ள 'கியூ.ஆர்.,' கோடு
சிம்ஸ் பூங்காவில் மரங்கள் விபரம் அறிந்து கொள்ள 'கியூ.ஆர்.,' கோடு
சிம்ஸ் பூங்காவில் மரங்கள் விபரம் அறிந்து கொள்ள 'கியூ.ஆர்.,' கோடு
ADDED : மே 26, 2024 11:25 PM

குன்னுார்;குன்னுார் சிம்ஸ் பூங்காவில் மரங்களின் விபரங்களை 'ஆன்லைனில்' அறிந்து கொள்ளும் 'கியூ ஆர்' கோடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்கா, 1874ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இங்கு நுாற்றாண்டு பழமை வாய்ந்த, 86 தாவர குடும்பங்களை சேர்ந்த, 1200 வகையான தாவரங்கள் உள்ளன. அதில், ருத்ராட்சம், யானைக்கால் மரம், பேப்பர் தயாரிக்கும் மரம் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை மரங்கள் உள்ளன.
தற்போது. பூங்காவின், 150வது ஆண்டையொட்டி சிறப்பிக்கும் வகையில், தோட்டக்கலை துறையின் சார்பில் முதன் முறையாக, இங்குள்ள மரங்களின் விபரங்களை அறிந்து கொள்ளும் 'கியூஆர்' கோடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த மரங்களின் தாவர பெயர், பூர்வீகம். நடவு செய்யப்பட்ட ஆண்டு, தமிழ். ஆங்கிலத்தில் பெயர் விபரங்கள். அதன் சிறப்பு அம்சங்கள் உட்பட அனைத்து விபரங்களும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில்,'சிம்ஸ் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ள நிலையில், 350 மரங்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு 'கியூ ஆர்' கோடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, 10 மரங்களுக்கு 'கியூ ஆர்' கோடு போர்டு மரத்தின் அருகில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது மொபைலில் ஸ்கேன் செய்யும் போது மரங்களின் விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்,'' என்றனர்.

