/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்; வழி தெரியாமல் விழி பிதுங்கும் டிரைவர்கள்
/
வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்; வழி தெரியாமல் விழி பிதுங்கும் டிரைவர்கள்
வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்; வழி தெரியாமல் விழி பிதுங்கும் டிரைவர்கள்
வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்; வழி தெரியாமல் விழி பிதுங்கும் டிரைவர்கள்
ADDED : ஆக 29, 2024 01:17 AM

சூலுார்: சூலுார் மற்றும் சிந்தாமணிப்புதூரில் தினமும் வரிசை கட்டி நிற்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்.
கரூர்--கோவை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சூலுார் மற்றும் சிந்தாமணி புதூர் உள்ளது. இந்த ரோட்டில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாக உள்ளது.
இந்த ரோடு சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும், சூலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரி முதல், ரங்கநாதபுரம் வரை, ரோடு குறுகலாகவே உள்ளது. இரு புறமும் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்கள் ரோட்டை கடப்பதற்கு, பெரும் பாடுபட வேண்டியதாக உள்ளது.
இதேபோல், சிந்தாமணிப்புதூரில், திருச்சி ரோடும், எல் அண்ட் டி பை -பாஸ் ரோடும் சந்திக்கின்றன. அதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக உள்ளது. நான்கு ரோடுகளிலும் வாகனங்கள் வரிசை கட்டி நின்று செல்வது அதிகரித்துள்ளது. எல் அண்டு டி பைபாஸ் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் சிக்னல் வாயிலாக போக்குவரத்தை சீர் செய்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. எனவே அந்த சந்திப்பில் திருச்சி சாலையில் மேம்பால் கட்டினால் மட்டுமே அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,' தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். அவசரத்துக்கு எங்கும் செல்லமுடிவதில்லை. சூலுாரில் ஆக்கிரமிப்புகளை மீட்டு, ரோட்டை அகலப்படுத்த வேண்டும். அதேபோல், சிந்தாமணி புதூரில் மேம்பாலம் கட்ட வேண்டும். அப்போது தான் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்' என்றனர்.