ADDED : மே 12, 2024 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே மூன்று நாட்கள் நடந்த ராதா கிருஷ்ணா கல்யாண மஹோத்ஸவம் நிறைவடைந்தது.
ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஆகிய இணைந்து மேட்டுப்பாளையம் ரோடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி கேட் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மூன்று நாள் ராதா கல்யாண மஹோத்ஸவ விழாவை நடத்தியது. நிறைவு நாளையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராதா கல்யாண உற்சவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.