/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை கால்வாய் கல்வெட்டு சீரமைப்பு
/
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை கால்வாய் கல்வெட்டு சீரமைப்பு
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை கால்வாய் கல்வெட்டு சீரமைப்பு
மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை கால்வாய் கல்வெட்டு சீரமைப்பு
ADDED : ஆக 20, 2024 02:04 AM

குன்னுார்:குன்னுாரில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், மழை நீர் கால்வாய் கல்வெட்டுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
குன்னுார் கோத்தகிரி உட்பட சுற்றுப்புற பகுதிகளில், மழை காலங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக சாலையோரங்களில் உள்ள மழை நீர் கல்வெட்டுகள், சேறு நிரம்பி, மழை நீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் ஓடுகிறது.
இதனால், சாலை சேதமடைவதுடன், மண் சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண கோட்ட பொறியாளர் குழந்தை ராஜ் உத்தரவின் பேரில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெட்டுக்கள் துார்வாரி சீரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.