ADDED : மே 05, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்;ஊட்டி மண்டல போக்குவரத்து கழகத்தில் பல ஆண்டுகள் ஓடி பழுதடைந்த பஸ்களே இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 3:00 மணிக்கு கோவை -- ஊட்டி அரசு பஸ் குன்னூர் வந்தது. பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பஸ்சில் ஏறினர்.
குன்னூர் அருவங்காடு, எல்லநள்ளி பகுதிகளில் பெய்த கன மழையில், பஸ்சிற்குள் மழை நீர் ஒழுகியது. பயணிகள் நனைந்தவாறே பயணம் செய்தனர்.
இதேபோல், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட வழித்தடத்தில் இயங்கிய பஸ்களில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் சிரமத்துடன் பயணித்தனர். அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ஒழுகும் பஸ்களில் ஆய்வு மேற்கொண்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.