/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஏழு மாதங்களாக தேங்கி நிற்கும் மழை நீர் டி.ஆர்.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
/
ஏழு மாதங்களாக தேங்கி நிற்கும் மழை நீர் டி.ஆர்.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
ஏழு மாதங்களாக தேங்கி நிற்கும் மழை நீர் டி.ஆர்.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
ஏழு மாதங்களாக தேங்கி நிற்கும் மழை நீர் டி.ஆர்.ஓ.,விடம் மக்கள் சரமாரி புகார்
ADDED : ஜூலை 02, 2024 02:33 AM
அன்னுார்;வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
அன்னுாரில், சத்தி ரோட்டில், புவனேஸ்வரி நகர், தர்மர் கோவில் பின்புறம், பழனி கிருஷ்ணா அவென்யூ மற்றும் கிழக்குப் பகுதி தோட்டங்களில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் மழைநீர் வந்தது.
மேலும் தற்போது குளத்திலிருந்து நீர் வந்து புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா அவென்யூவில் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது.
நீர் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரி, பேரூராட்சி சார்பில் கோவை கலெக்டர் கிராந்தி குமாரிடம், மனு அளித்தனர். அதிகாரிகளை அனுப்புவதாக கலெக்டர் தெரிவித்தார்.
இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன், தாசில்தார் நித்திலவள்ளி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளை நீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகளிடம் பொதுமக்கள் சரமாரியாக புகார் கூறுகையில்,' ஏழு மாதங்களாக மழை நீர் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. குளத்திலிருந்து வரும் நீர் மற்றும் மழை நீர் இரண்டும் சேர்ந்து வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.
இதனால் சுவர்கள் பலமிழந்து, வீடுகள் விழும் நிலையில் உள்ளன. நீர்வழிப் பாதை கண்டறியவில்லை. ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. பலமுறை புகார் தெரிவித்தும் பொதுப்பணித்துறை, பேரூராட்சி, வருவாய் துறை என எந்த துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை,' என்றனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம், குளத்திலிருந்து மழை நீர் செல்லும் பாதை குறித்து முழு விபரம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார். பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆய்வில் தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் பெலிக்ஸ், கவுன்சிலர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.