/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி என்.சி.சி., மாணவர்கள் பங்கேற்பு

ADDED : ஆக 24, 2024 02:06 AM
ஊட்டி:ஊட்டி அருகே, நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 31 தமிழ்நாடு என்.சி.சி., அணி சார்பில், 75 மாணவர்கள் என்.சி.சி., பயிற்சி பெற்று வருகின்றனர்.
பொதுமக்களிடையே மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், என்.சி.சி., கர்னல் உத்தரவின் பேரில், முதன்மை அலுவலர் சுப்பிரமணியன், தலைமையில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை பள்ளி தலைமையாசிரியர் துரை மூர்த்தி துவக்கி வைத்தார். பள்ளியில் துவங்கிய பேரணி, வி.பி.என்., நரிகுளி ஆடா, மொட்டோரை என, 2 கி.மீ., துாரம் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது, இதில், பங்கேற்ற மாணவர்கள், 'மழை நீர் சேகரிப்பின் அவசியம், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதால் ஏற்படும் நன்மைகள்,' குறித்து பதாகைகள் ஏந்தியப்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர், ஆசிரியைகள் பலர் பங்கேற்றனர்.