/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் தேங்கும் மழைநீர்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
/
சாலையோரம் தேங்கும் மழைநீர்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
சாலையோரம் தேங்கும் மழைநீர்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
சாலையோரம் தேங்கும் மழைநீர்; சுகாதாரம் வெகுவாக பாதிப்பு
ADDED : ஆக 07, 2024 10:37 PM

கூடலுார் : கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் தேங்கும் மழைநீரால், சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கூடலுார் நகரில் வாகன போக்குவரத்து இடையூறு இன்றி மக்கள் நடந்து செல்லவும், மழைநீர் வழிந்தோட சாலையோரம் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர் பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது பெய்து வரும் பருவமழையில், நகர சாலையில் மழை நீர் வழிந்தோடுகிறது. சில இடங்களில் சாலையோரம் தேங்கும் மழைநீரால் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியை கடந்து செல்ல மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கூறுகையில்,'கழிவு நீர் கால்வாயை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.