/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மழை நீர்: சுத்தம் செய்த போலீசார்
/
போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மழை நீர்: சுத்தம் செய்த போலீசார்
போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மழை நீர்: சுத்தம் செய்த போலீசார்
போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மழை நீர்: சுத்தம் செய்த போலீசார்
ADDED : ஆக 20, 2024 10:08 PM

ஊட்டி : ஊட்டியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை சூழ்ந்த மழை நீரை போலீசார் வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
ஊட்டியில் நேற்று முன்தினம் மாலை, ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், கழிவுநீருடன் மழை நீர் கலந்து, அரசு போக்குவரத்து கழக பணிமனையை சூழ்ந்தது. பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வெளியேறினர்.
குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் பணி மனைக்கு செல்ல முடியாமல் வெளிபுறத்தில் திருப்பி அனுப்பினர். நேற்று முன்தினம் இரவு மின் மோட்டார் உதவியுடன் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின் நிலைமை சீரானது.
அதேபோல், பஸ் ஸ்டாண்ட் ரயில்வே பாலத்தை ஒட்டி ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை மழை நீர் சூழ்ந்து பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று காலை மழை நீரை வெளியேற்றும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டனர்.