தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ( ரெசிப்பி - 2) மீன் பொளிச்சது

( ரெசிப்பி - 2) மீன் பொளிச்சது

( ரெசிப்பி - 2) மீன் பொளிச்சது


ADDED : ஆக 10, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:


மீன் - அரை கிலோ

சின்ன வெங்காயம் - 10

மிளகாய் துாள் - ஒரு ஸ்பூன்

கரம் மசாலா துாள் - இரண்டு ஸ்பூன்

பூண்டு - நான்கு

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தக்காளி - இரண்டு

பச்சை மிளகாய் - இரண்டு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - இரண்டு ஸ்பூன்

செய்முறை:


மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து உப்பு, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து நன்றாக பிரட்டி தனியாக வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். சிறிது வதங்கிய உடன் பொடியாக நறுக்கிய புதினா, கொத்த மல்லி இலை தட்டிய இஞ்சி, பூண்டு இவைகளை போட்டு வதக்கி இறக்கி விட வேண்டும்.

பிறகு மசாலா தடவிய மீனை தோசை கல்லில் வைத்து லேசாக இரண்டு புறமும் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு வாழை இலை எடுத்து நன்கு கழுவி வேண்டிய அளவு வெட்டி அதன் மேல் சிறிதளவு மசாலாவை வைத்து பரப்பி விட வேண்டும்.

நடுவில் மீனை வைத்து, மீனின் மேல் மீண்டும் மசாலாவைத் நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இலையை மடக்கி நன்றாக பேக் செய்ய வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள வாழை இலை மீனை வைத்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.இப்போது சூப்பரான கேரளா ஸ்டைல் மீன் பொளிச்சது ரெடி. இதனை சாதம், இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us