/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க பரிந்துரை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தகவல்
/
கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க பரிந்துரை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தகவல்
கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க பரிந்துரை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தகவல்
கூடுதல் தீயணைப்பு வீரர்களை நியமிக்க பரிந்துரை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தகவல்
ADDED : ஆக 23, 2024 11:31 PM

குன்னுார்;''மலைப்பகுதிகளில் நிலச்சரிவு உட்பட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதால்,தீயணைப்பு வீரர்களை கூடுதலாக நியமிப்பது குறித்து அரசிடம் பரிந்துரை செய்யப்படும்,'' என, சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் தீயணைப்பு நிலையம், பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனையில், தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பிறகு, 'இன்கோசர்வ்' அலுவலகத்தில் நவீனமயமான, 'ஊட்டி டீ' பேக்கிங் இயந்திரங்களை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி :
நீலகிரி மாவட்டத்தில், 2021ம் ஆண்டில், 50.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'நபார்டு வங்கி' உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேயிலை கூட்டுறவு நிறுவனங்களில் நிதி பகிர்ந்து அளிக்கப்பட்ட பணிகள்; 2022ல் 'இன்கோசர்வ்' அலுவலகத்தில், 3.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பேக்கேஜ் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு உட்பட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதால், தீயணைப்பு துறைக்கு போதுமான வாகனங்கள், உபகரணங்கள் அளிப்பது; தீயணைப்பு வீரர்களை கூடுதலாக நியமிப்பது குறித்து குழு அரசுக்கு பரிந்துரைக்கும்.
புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக அரசுக்கு அனுப்பிய விரிவான திட்டத்தில், 5.68 கோடி ரூபாயை உடனடியாக ஒதுக்கீடு செய்ய குழு பரிந்துரைக்கும்,'' என்றார்.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, ஆர்.டி.ஓ., சதீஷ், உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

