/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது
/
சிறுமிக்கு தொல்லை தந்த உறவினர் கைது
ADDED : மார் 04, 2025 11:57 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே புறநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர் தம்பதியின், 13 வயது மகள், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமியின் நடவடிக்கையில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அங்கு வந்த சிறுமி, உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என, கூறியுள்ளார்.
பள்ளி நிர்வாகம், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. ஊட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், ஈரோட்டை சேர்ந்த சிறுமியின் உறவினர், இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துஉள்ளார்.
நேற்று, 'போக்சோ' வழக்கில், ஈரோட்டை சேர்ந்த, 48 வயதான உறவினரை போலீசார் கைது செய்தனர்.