தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மூதாட்டி கொலை உறவினர் கைது

மூதாட்டி கொலை உறவினர் கைது

மூதாட்டி கொலை உறவினர் கைது


ADDED : ஜூலை 15, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு அருகே, மூதாட்டியை கொலை செய்த, உறவினரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேன்கரை சேறும்பகுளம் கரிமன்குன்னு பகுதியை சேர்ந்த நஞ்சனின் மனைவி மாதவி, 69. வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் அருகே சகோதரர் பாபு குடும்பத்துடன் வசிக்கிறார். பாபுவின் மகன் சசி, 32.

இந்நிலையில், நேற்று முன்தினம் பணம் கேட்டு மாதவியின் வீட்டிற்கு சசி சென்றுள்ளார். பணம் கொடுக்க மறுத்த மாதவியின் தலையில் தடியால் தாக்கி உள்ளார்.

உறவினர்களும், அங்கிருந்த மக்களும் சேர்ந்து படுகாயமடைந்த மாதவியை பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மண்ணார்க்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து சசியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us