/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ஆய்வுக்கு பின் விடுவிப்பு
/
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ஆய்வுக்கு பின் விடுவிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ஆய்வுக்கு பின் விடுவிப்பு
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் ஆய்வுக்கு பின் விடுவிப்பு
ADDED : மார் 31, 2024 09:06 PM
ஊட்டி:நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம், குழுவின் ஆய்வுக்குப் பின், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாகவும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்களாகவும் உரிய அனுமதியின்றி எடுத்து செல்வோரிடம், பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் தேர்தல் தொடர்பானவயாக இல்லாத பட்சத்தில், விடுவிப்பு குழுவிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், ஆய்வுக்கு உட்படுத்தி, உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.
இது குறித்த தகவல்களை அறிய, மாவட்ட கருவூல அலுவலர் சங்கர நாராயணன் மற்றும் கணக்குகள் அலுவலர் கண்ணன் என்பவரை, 94424 04458 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம். நீலகிரியில், மூன்று சட்டசபை தொகுதிகளில், 29ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல், ஒரு கோடியே, 34 லட்சத்து, 62 ஆயிரத்து, 830 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 88 லட்சத்து, 57 ஆயிரத்து, 210 ரூபாய் தொகை, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் எவ்வித பதற்றமும், அச்சமும் அடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

