/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை பாதிப்பு பணிகளுக்கு விரைவில் நிவாரண தொகை
/
மழை பாதிப்பு பணிகளுக்கு விரைவில் நிவாரண தொகை
ADDED : ஜூலை 25, 2024 09:55 PM
ஊட்டி: ஊட்டி அரசு தமிழக விருந்தினர் மாளிகையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின் எம்.பி., ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பெய்த அதிக கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அதற்கான நிவாரண தொகையை மாநில முதல்வரிடம் விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.
கூட்டத்தில், அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.