/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பைக்காரா படகு இல்ல சாலை ரூ.3 கோடியில் சீரமைப்பு
/
பைக்காரா படகு இல்ல சாலை ரூ.3 கோடியில் சீரமைப்பு
ADDED : ஆக 04, 2024 10:33 PM

ஊட்டி:-ஊட்டி பைக்காரா படகு இல்ல சாலை, மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளதை அடுத்து, சுற்றலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள, பைக்காரா படகு இல்லத்தில், இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு சவாரி செய்வதில், சுற்றுலாப் பயணியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
படகு இல்லம் செல்லும், 2 கி.மீ., சாலையில், குழிகள் ஏற்பட்டு, வாகனங்கள் சென்று வர சிரமமாக இருந்தது. அதனால், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தில், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி நடந்தது.
பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நேற்று சாலையை திறந்து வைத்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''ஊட்டி பைக்கார படகு இல்ல தண்ணீர், சுத்தமானதாக உள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணியரின் வசதிக்காக, 29 படகுகள் இயக்கப்படுகின்றன. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறு, சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்து மகிழலாம்,'' என்றார்.