/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் உடைந்த தண்ணீர் குழாய்கள் சீரமைப்பு
/
பூங்காவில் உடைந்த தண்ணீர் குழாய்கள் சீரமைப்பு
ADDED : மே 29, 2024 10:04 PM

ஊட்டி :ஊட்டி தாவரவியல் பூங்காவில் உடைந்த குழாய்கள், நடைபாதைகள் சீரமைப்பு பணி நடந்தது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு நாள்தோறும், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடந்து முடிந்த, 126வது மலர் கண்காட்சியில் கடந்த, 17 நாட்களில், 2. 41 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து சென்றனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தாலும், பூங்கா நிர்வாகம் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தவறி உள்ளது. பூங்காவில், ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனியே கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அங்கு தண்ணீர் குழாய்கள் உடைந்து போதிய அளவில் தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது.
இதனால், சுற்றுலா பயணிகள் குறிப்பாக, பெண்கள் கழிவறையின் வெளியில் உள்ள தொட்டியில் இருந்து, தண்ணீர் எடுத்து செல்ல வேண்டிய அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள நடைபாதைகளும் சீரமைக்காததால், சிறுவர்கள், முதியவர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு சென்ற புகாரின் அடிப்டையில், கடந்த இரண்டு நாட்களாக நடைபாதை, உடைந்த தண்ணீர் குழாய்களை சீரமைக்கும் பணி நடந்தது. புதிய தண்ணீர் தொட்டியும் வைக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.