/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ரெப்கோ' வங்கியில் 826 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
/
'ரெப்கோ' வங்கியில் 826 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
'ரெப்கோ' வங்கியில் 826 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
'ரெப்கோ' வங்கியில் 826 பயனாளிகளுக்கு ரூ.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ADDED : மார் 04, 2025 12:28 AM

கூடலுார், ; கூடலுாரில் ரெப்கோ வங்கி சார்பில் நடந்த விழாவில், 826 பயனாளிகளுக்கு, 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கூடலுார் நர்த்தகி திருமண மண்டபத்தில், ரெப்கோ வங்கி மற்றும் துணை நிறுவனங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வங்கி முதன்மை மேலாளர் ரங்கராஜ் வரவேற்றார்.
தொடர்ந்து, '90 லட்சம் ரூபாய் மதிப்பில், 826 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், மருத்துவ உதவி தொகை, 94 கல்வி உதவித்தொகை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய வர்களுக்கு மற தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம்,' என, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
விழாவில், பேரவை பிரதிநிதிகள் கணேஷன், கலை செல்வன், ஞானபிரகாசம், லோகநாதன், கிருஷ்ணபாரதி, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பந்தலுார் ரெப்கோ வங்கி மேலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
---ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் தங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், ''கூடலுாரில் தாயகம் திரும்பிய மக்கள் பயன்படும் வகையில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்கபடும், கூடலுார், பந்தலுாரில், 1.19 கோடி ரூபாயில் 12 பள்ளிகளில் கழிப்பிடங்கள், இரண்டு மேடைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. பேரவை தேர்தலில் நின்று தோற்று போனவர்கள், அரசியல் காரணத்துக்காக, கழிப்பிடம் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாக, கூறிவரும் புகாரில் உண்மை இல்லை. கட்டுமான பணிக்கான தொகை, காசோலை மூலம் தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் மூலம் பணிகள் நடந்துள்ளது. இதில், நிர்வாகிகள் யாரும் தலையிடவில்லை பள்ளி சார்பாக எந்த புகாரும் இல்லை,' என்றனர்.