/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் கசிவால் குடியிருப்பு பாதிப்பு
/
மின் கசிவால் குடியிருப்பு பாதிப்பு
ADDED : பிப் 14, 2025 09:44 PM

பந்தலுார்:
பந்தலுார் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில், பாரி ஆக்ரோ எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருபவர் கரிகாலன்.
நேற்று முன்தினம் இரவு இவர் தேயிலை தொழிற்சாலையில் பணிக்கு சென்றுள்ளார். இவரது மனைவி அருகிலுள்ள அவரின் தாயார் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அப்போது, அதிகாலை, 2:00- மணிக்கு வீட்டு முன்பக்க அறையில் தீப்பற்றி எரிவதாக அருகில் உள்ளவர்கள் கரிகாலனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து, மின் சப்ளை துண்டிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கட்டில் மற்றும் படுக்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது. ஆய்வின்போது, மின் கசிவால் தீப்பற்றி இருப்பது தெரிய வந்தது.
வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடந்து வருகிறது.

