/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை லாரிகளுக்கு கட்டுப்பாடு ;தேக்கம் அடைந்து வர்த்தகம் பாதிப்பு
/
தேயிலை லாரிகளுக்கு கட்டுப்பாடு ;தேக்கம் அடைந்து வர்த்தகம் பாதிப்பு
தேயிலை லாரிகளுக்கு கட்டுப்பாடு ;தேக்கம் அடைந்து வர்த்தகம் பாதிப்பு
தேயிலை லாரிகளுக்கு கட்டுப்பாடு ;தேக்கம் அடைந்து வர்த்தகம் பாதிப்பு
ADDED : மே 03, 2024 11:22 PM
குன்னுார்:குன்னுார் பர்லியார் வழித்தடத்தில் தேயிலை துாள் லாரிகள் பகலில் வர அனுமதிக்காததால் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் தேயிலை துாள் குன்னுார் ஏல மையங்களில் ஏலம் விடப்படுகிறது. தேயிலை துாள் கோவை குடோன்களுக்கு கொண்டு சென்று அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், குன்னுார்-- மேட்டுப்பாளையம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டதால் தேயிலை மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகள் கோத்தகிரி வழியாக செல்கின்றன.
பிறகு சமவெளியில் இருந்து வரும் வாகனங்கள் பர்லியார் வழியாக பகல் நேரங்களில் போலீசார் அனுமதிப்பதில்லை என டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வர்த்தகர்கள் கூறுகையில், 'ஏற்கனவே தேயிலை துாள் மூட்டைகள் மாற்று வழியில் செல்வதால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. எனினும், மீண்டும் நீலகிரிக்கு வரும் இந்த லாரிகளை பகல் நேரங்களில அனுமதிப்பதில்லை. இதனால் அடுத்த முறை தேயிலை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு சிறிது சிறிதாக தேக்கம் அடைகிறது. வர்த்தகம் பாதிக்கிறது,' என்றனர்.