/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொது குழு கூட்டம்
/
ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொது குழு கூட்டம்
ADDED : செப் 09, 2024 02:58 AM
பந்தலுார்:பந்தலுாரில், அரசு ஓய்வு பெற்றோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. செயல் தலைவர் ஓய்வு பெற்ற டாக்டர் கணேஷ் தலைமை வகித்தார். நாகராஜ் வரவேற்றார்.
அதில்,'ஓய்வு பெற்றோருக்கு அரசு வாயிலாக கிடைக்க வேண்டிய பயன்களை பெற்று தருவது; ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவது; பந்தலுார் தாலுகா வளர்ச்சி, மரக்கன்றுகள் நடுவது, மாணவர்களின் கல்வி மேம்பட ஊக்குவிப்பது,' குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தலைவராக தங்கராஜ், துணை தலைவர் பழனிமுத்து, செயலாளர் சந்திரன், பொருளாளர் அந்தோணி டிக்ரூஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முத்துசாமி நன்றி கூறினார்.