/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியிருப்பு கட்டடத்தில் தங்கும் விடுதி காலி செய்ய வருவாய் துறை நோட்டீஸ்
/
குடியிருப்பு கட்டடத்தில் தங்கும் விடுதி காலி செய்ய வருவாய் துறை நோட்டீஸ்
குடியிருப்பு கட்டடத்தில் தங்கும் விடுதி காலி செய்ய வருவாய் துறை நோட்டீஸ்
குடியிருப்பு கட்டடத்தில் தங்கும் விடுதி காலி செய்ய வருவாய் துறை நோட்டீஸ்
ADDED : செப் 01, 2024 02:08 AM

கூடலூர்;மசினகுடியில் குடியிருப்பு கட்டடத்தில் நடத்தப்பட்டு வந்த தங்கும் விடுதியை மூன்று நாட்களுக்குள் காலி செய்ய வருவாய் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை, மசினகுடி ஆச்சக்கரை பகுதியில், செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட் ஊழியர்கள், அங்கு தங்க வரும் சுற்றுலா பயணிகள், பார்த்து ரசிப்பதற்காக, இரவில் அப்பகுதிக்கு வரும் காட்டு யானைக்கு, மனிதர்கள் உண்ணக்கூடிய, உணவுகளை கொடுப்பதாக புகார் எழுந்தது.
கடந்த, ஜூன் 5ம் தேதி அங்கு வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், 'இரவில் அப்பகுதிக்கு வரும் காட்டு யானைக்கு, சோறு, இட்லி, தோசை, பர்கர் உள்ளிட்ட உணவுகள் கொடுப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக விடுதி மேலாளர் உட்பட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ரிசார்ட் கட்டடம் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், குடியிருப்பு கட்டடத்துக்கு அனுமதி பெற்று, அதில் வணிக ரீதியாக தங்கும் விடுதி நடத்தி வருவது தெரியவந்தது.
ஊட்டி தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் சுப்பிரமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் சிவகுமார், ஊராட்சி செயலாளர் கிரன்குமார் ஆகியோர், மசினகுடி ஊராட்சி சார்பில், மூன்று நாட்களுக்குள், விடுதியை காலி செய்ய வேண்டும் என, விடுதி உரிமையாளர் சீனிவாசராவிடம் நேற்று, நோட்டீஸ் வழங்கினர்.