/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர முட்புதரால் விபத்து அபாயம்
/
சாலையோர முட்புதரால் விபத்து அபாயம்
ADDED : ஆக 27, 2024 01:50 AM

கூடலுார்:கூடலுார் ஓவேலி சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகன விபத்து அபாயம் உள்ளதால், டிரைவர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
கூடலுார் ஓவேலி பேரூராட்சியில் வசிக்கும் மக்கள், மாணவர்கள் பல்வேறு பணிகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர்.
மக்கள் பயன்பாட்டுக்காக, காந்திநகர், பெரியசோலை, எல்லமலை, பார்வுட், ஆருட்டுப்பாறை பகுதிகளுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் இயக்கப்படாத பல கிராம மக்கள் அவசர தேவைக்கு தனியார் வாகனங்களை நம்பியுள்ளனர்.
குறுகிய இப்பகுதி சாலை, பல வளைவுகளை கொண்டுள்ளதால், டிரைவர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்கள் இயக்க வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில், சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகன விபத்து அபாயம் உள்ளதால், டிரைவர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன், சாலையோர முட்புதர்களை அகற்ற வேண்டும்.
டிரைவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் உள்ள குறுகிய சாலை, பல வளைவுகளை கொண்டு அமைந்துள்ளது.
இந்நிலையில், இச்சாலை ஓரங்களில் குறிப்பாக வளைவான பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களால், வாகன விபத்து அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலைத்துறையினர், அவைகளை அகற்றி தொடர்ந்து பராமரிக்க வேண்டும்,' என்றனர்.

