/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுப்பட்டறை சாலையில் குழி வாகன விபத்து ஏற்படும் அபாயம்
/
ஓட்டுப்பட்டறை சாலையில் குழி வாகன விபத்து ஏற்படும் அபாயம்
ஓட்டுப்பட்டறை சாலையில் குழி வாகன விபத்து ஏற்படும் அபாயம்
ஓட்டுப்பட்டறை சாலையில் குழி வாகன விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 10, 2024 01:45 AM

குன்னுார்;குன்னுார்- ஓட்டுப்பட்டறை சாலையின் பல இடங்களிலும் குழிகள் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
குன்னுார் லெவல் கிராசிங் பகுதியிலிருந்து ஓட்டுப்பட்டறை செல்லும் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
'தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் நீதிமன்றம், போலீஸ் ஸ்டேஷன், தபால் அலுவலகம்,' என, அனைத்து முக்கிய அலுவலகங்களுக்கும் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. மிகவும் குறுகலான இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
நகராட்சி சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட இந்த சாலையில் பல இடங்களிலும் குழிகள் ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்., 7ம் தேதி இந்த சாலையில் நடந்து வந்த வியாபாரி ஒருவர் அரசு பஸ்சில் சிக்கி பலியானார். இதேபோல, அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

