/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணற்றில் சுகாதாரமற்ற குடிநீர் நோய் பரவும் அபாயம்
/
கிணற்றில் சுகாதாரமற்ற குடிநீர் நோய் பரவும் அபாயம்
ADDED : மே 09, 2024 05:12 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சப்பந்தோடு கிராமம் அமைந்துள்ளது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், ஊராட்சி மூலம் கிராமத்திற்கு மத்தியில் அமைத்துள்ள குடிநீர் கிணறு பராமரிப்பின்றி புதர்கள் சூழ்ந்துள்ளதால், குடிநீர் மாசடைந்து உள்ளது.
இந்த தண்ணீரை இப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யும் நிலையில், உணவுகள் சமைக்க கொதிக்க வைக்கும் போது தண்ணீரின் மேல் பகுதியில் எண்ணெய் மிதப்பது போல் ஒருவித திரவம் மிகுந்து பொதுமக்களுக்கு நோய் அபாயம் ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஊராட்சி மூலம் புதிதாக மேலும் ஒரு கிணறு அமைத்துள்ள நிலையில், அந்த கிணறும் பாழடைந்து வருகிறது.
எனவே, இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சப்பந்தோடு கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.