நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் பகுதியில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் பழைய அரசு பள்ளி கட்டடம் உள்ளது.
இதன் ஒரு பகுதியில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கட்டடத்தின் பின்பகுதியில் தனியார் குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், அரசு கட்டடத்தின் பின்பகுதியில் இரவு நேரத்தில் மண்ணை வெட்டி அகற்றி எடுத்து செல்கின்றனர்.
இதனால், கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

