/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடுப்பு சுவர் அமைக்காததால் சாலை துண்டிக்கும் அபாயம்
/
தடுப்பு சுவர் அமைக்காததால் சாலை துண்டிக்கும் அபாயம்
தடுப்பு சுவர் அமைக்காததால் சாலை துண்டிக்கும் அபாயம்
தடுப்பு சுவர் அமைக்காததால் சாலை துண்டிக்கும் அபாயம்
ADDED : மார் 04, 2025 12:14 AM

கோத்தகிரி, ; கோத்தகிரி கட்டபெட்டு - பில்லிக்கம்பை இடைய, தடுப்பு சுவர் அமைக்காததால் சாலை துண்டித்து, விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள், தேயிலை தொழிற்சாலை வாகனங்கள், பள்ளி வாகனங்கள் உட்பட, நுாற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள், கட்டபெட்டு வழியாக, கக்குச்சிக்கு இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கட்டபெட்டு - பில்லிக்கம்பை இடையே, பங்களோரை பகுதியில், டாஸ்மாக் கடை அருகே, சாலை ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. நேர்த்தியாக சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன.
தடுப்புச் சுவர் அமைக்கப்படாத இடத்தில், வாகனங்கள் ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளது. மழைநீர் சாலையோரத்தில் ஓடுவதால், மண்ணரிப்பால், சாலை துண்டித்து விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், தற்காலிகமாக, மண் குவித்து, எச்சரிக்கை கயிறு கட்டப்பட்டுள்ளது.
எனவே, மழைக் காலம் துவங்கும் முன்பு, சாலையோரத்தில் நிரந்தரமாக தடுப்பு சுவர் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.