தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சாலையோரம் வைக்கப்பட்ட குடிநீர் திட்ட அறிவிப்பு

சாலையோரம் வைக்கப்பட்ட குடிநீர் திட்ட அறிவிப்பு

சாலையோரம் வைக்கப்பட்ட குடிநீர் திட்ட அறிவிப்பு


ADDED : ஏப் 30, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2024 01:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பந்தலுார்;பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட கையுன்னி, அருகே பி.ஆர்.எப்., பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது.

இங்கு, 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், போதிய தண்ணீர் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருவதுடன், குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், இப்பகுதி மக்களுக்கு, 8.52 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் திட்டம் செயல்படுத்துப்பட்டு உள்ளதாக, சம்பந்தமில்லாத இடத்தில் சாலை ஓரத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் கூறுகையில், 'இது குறித்து முறையாக ஆய்வு செய்து, திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us