/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்ட் பராமரிக்க ரூ.1.19 கோடி இருக்கைகள் இல்லாமல் பயணிகள் சிரமம்
/
பஸ் ஸ்டாண்ட் பராமரிக்க ரூ.1.19 கோடி இருக்கைகள் இல்லாமல் பயணிகள் சிரமம்
பஸ் ஸ்டாண்ட் பராமரிக்க ரூ.1.19 கோடி இருக்கைகள் இல்லாமல் பயணிகள் சிரமம்
பஸ் ஸ்டாண்ட் பராமரிக்க ரூ.1.19 கோடி இருக்கைகள் இல்லாமல் பயணிகள் சிரமம்
ADDED : ஏப் 23, 2024 02:30 AM

குன்னுார்:குன்னூர் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிக்கு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இருக்கைகள் இல்லாமல் கடும் வெயிலில் பயணிகள் சிரமத்துடன் காத்து நிற்கின்றனர்.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட் மற்ற பஸ் ஸ்டாண்ட்களை போல் இல்லாமல் கோத்தகிரி, பேரக்ஸ், ஊட்டி என அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் சாலையில் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் 'பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி செய்யப்படும்,' என, கட்சிகள் வாக்குறுதிகள் அளித்தாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, 2 கோடி ரூபாய் ஒதுக்கி பராமரிப்பு செய்து பொலிவு படுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு கடந்த பிப், மாதம் இறுதியில், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்புக்கு,1.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, இதற்கான கல்வெட்டை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் துவக்கி வைத்தார்.
ஆனால், பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் உள்ள அறைகள் இருக்கும் இடம் மட்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலில் நீண்ட நேரம் கால்கடுக்க காத்து நிற்கின்றனர்.
மக்கள் கூறுகையில், 'பயணிகளுக்கு இருக்கைகள் அமைப்பதுடன். 1.19 கோடி ரூபாய் நிதியை முறையாக பயன்படுத்தி பஸ் ஸ்டாண்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

