/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேத்தியில் 56 பயனாளிகளுக்கு ரூ. 1.96 கோடி நலத்திட்ட உதவிகள்; அரசின் திட்டங்களை பயன்படுத்த அறிவுரை

ADDED : மார் 13, 2025 09:00 PM
ஊட்டி; கேத்தியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 56 பயனாளிகளுக்கு 1.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட சாந்துார் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், ''மக்கள் தொடர்பு முகாமில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை திட்டங்கள் , தோட்டக்கலைத் துறை திட்டங்கள் என பல்வேறு திட்டங்களின் கீழ், 1.96 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் 56 பயனளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும். பொதுமக்களிடம் பெறப்படும் அனைத்து மனுக்களும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,''என்றார்
முன்னதாக, கூட்டுறவு துறை , பொது சுகாதாரத்துறை,கேத்தி பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கூடுதல் கலெக்டர் கவுசிக் , சப்- கலெக்டர் சங்கீதா உட்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றன.