/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூர்யா படத்தில் நடிக்க ஊட்டி வந்த ரஷ்யர்கள் வெளியேற்றம்
/
சூர்யா படத்தில் நடிக்க ஊட்டி வந்த ரஷ்யர்கள் வெளியேற்றம்
சூர்யா படத்தில் நடிக்க ஊட்டி வந்த ரஷ்யர்கள் வெளியேற்றம்
சூர்யா படத்தில் நடிக்க ஊட்டி வந்த ரஷ்யர்கள் வெளியேற்றம்
ADDED : ஆக 17, 2024 01:40 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள, 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் தமிழ் படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
படபிடிப்பிற்காக ரஷ்யாவைச் சேர்ந்த, 155 பேர், ஜூலை 27ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். அவர்கள் ஊட்டியில் மூன்று பிரபல தனியார் ஹோட்டல்களில் தங்கி படப்பிடிப்பிற்கு சென்று வந்தனர்.
பொதுவாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஊட்டியில் தங்கினால், விடுதி நிர்வாகத்தினர், அதுகுறித்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் ரஷ்ய நாட்டினர் குறித்து தெரிவிக்கவில்லை.
கடந்த வாரம் படப்பிடிப்பின்போது, நடிகர் சூர்யாவுக்கு சிறு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதைஅடுத்து, 155 ரஷ்யர்களில், 42 பேர் ரஷ்யா திரும்பினர். 115 பேர் ஊட்டியில் தொடர்ந்து தங்கினர்.
இந்நிலையில், ரஷ்ய நாட்டினரின் விபரங்களை நீலகிரி எஸ்.பி., அலுவலகத்திற்கு முறையாக தெரிவிக்காதது குறித்து விளக்கம் அளிக்குமாறு, நீலகிரி மாவட்ட தனிப்பிரிவு போலீசார் சம்பந்தபட்ட ஹோட்டல்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கினர்.
தொடர்ந்து, நேற்று காலை ரஷ்ய நாட்டிலிருந்து வந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

