sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை மாவட்டத்தில் 'கூல் பீர்' :மது பிரியர்களால் விற்பனை அமோகம்

/

மலை மாவட்டத்தில் 'கூல் பீர்' :மது பிரியர்களால் விற்பனை அமோகம்

மலை மாவட்டத்தில் 'கூல் பீர்' :மது பிரியர்களால் விற்பனை அமோகம்

மலை மாவட்டத்தில் 'கூல் பீர்' :மது பிரியர்களால் விற்பனை அமோகம்


ADDED : ஏப் 26, 2024 12:09 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், கூல் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

நீலகிரியில், ஆறு தாலுகா பகுதிகளில், 73 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில், '43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகை பீர், 13 வகையான ஒயின் ஆகியவை மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இது, தவிர, வெளிநாட்டு மதுபானங்கள் 'எலைட் டாஸ்மாக் கடைகள்' மூலம் விற்கப்படுகின்றன.

பீர் விற்பனை அதிகரிப்பு


இந்நிலையில், தற்போது, டாஸ்மாக் கடைகளில் சாதாரண ரக குவாட்டர், உயர்ரக குவாட்டர், புல் பாட்டில்கள் விற்கப்படுகின்றன. பீர் வகையில், 325 மி.லி., 650 மி.லி., என, 2 அளவுகளில் பல்வேறு பிராண்டுகளில் பீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி, 90 ஆயிரம் முதல், 1 லட்சம் வரை பல்வேறு வகையான மதுபாட்டில்கள் விற்பனையாகிறது.

அதில், பீர் வகை, 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பாட்டில் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக பீர் வகை, 25 ஆயிரம் பாட்டிலாக விற்பனை அதிகரித்துள்ளது. பெரும்பாலும், உயர்ரக குவாட்டர் பயன்படுத்தும் மது பிரியர்கள் சுட்டெரிக்கு வெயிலுக்கு ' பீர்' வகைக்கு மாறியுள்ளனர். மே மாதங்களில் பீர் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் வகைகளை குளிரூட்டும் வசதி இல்லாததால், பீர் வகைகளை வாங்கி செல்லும் மது பிரியர்கள் வீடுகளில் பிரிட்ஜில் வைத்து குளிரூட்டியபின் 'ஜில்லென' பருகி வருகின்றனர்.

டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'கோடைக்காலங்களில் மதுபானங்களில் குறிப்பாக பீர் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு மற்ற மதுவகைகள் சராசரி அளவில் விற்பனையானாலும், கடந்தாண்டை காட்டிலும் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

பீர் பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு பீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us