/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரிடரை சமாளிப்பதற்காக மணல் மூட்டைகள் தயார்
/
பேரிடரை சமாளிப்பதற்காக மணல் மூட்டைகள் தயார்
ADDED : மே 23, 2024 11:44 PM

கோத்தகிரி;கோத்தகிரி பகுதியில் பேரிடர் நாட்களில் பாதிப்புகளை சமாளிக்க, மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
'மேற்கு தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையும்,' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம், பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து, குழுக்கள் அமைத்து, பேரிடரை சமாளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முகாம்கள் அமைக்கப்பட்டு, வருவாய்த்துறை உட்பட, அரசு துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் மழையில் மண்சரிவு உள்ளிட்ட அசம்பாவிதம் நடக்கும் போது, உடனடியாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, நுாற்றுக்கணக்கான மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளது.
தவிர, நெடுஞ்சாலை துறை சார்பில், பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மற்றும் டிப்பர் லாரிகள் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன.
அதிகாரிகள் கூறுகையில், 'வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை உட்பட, அனைத்து துறை ஊழியர்கள் பேரிடர் நாட்களில் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். தேவையான வாகனங்கள், உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'என்றனர்.