/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
/
குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 21, 2024 12:14 AM

கோத்தகிரி;கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி-ஊட்டி வழித்தடத்தில் கட்டபெட்டு பஜார் பகுதி அமைந்துள்ளது. ஊட்டிக்கு உட்பட்ட கக்குச்சி, குன்னுாருக்கு உட்பட்ட ஜெகதளா மற்றும் கோத்தகிரிக்கு உட்பட்ட நடுஹட்டி ஊராட்சிகளின் எல்லையாக அமைந்துள்ளது.
இப்பகுதியில், அரசு அலுவலகங்கள், தனியார் கிளினிக்குகள், கடைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மக்களின் அன்றாட தேவைகளுக்காக, கட்டபெட்டு பஜாரை கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால், நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.நகரப் பகுதியில் அன்றாட சேகரமாகும் குப்பைகள், மூன்று ஊராட்சிகள் மூலம், குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அடிக்கடி அகற்றப்படுவதில்லை. இதனால், துர்நாற்றத்துடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
குறிப்பாக, நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தற்போது, மழை பெய்து வருவதால், குப்பைகள் மழை நீரில் நனைத்து கழிவுநீர் ஓடுகிறது. இதனால், மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட நிர்வாகம், குப்பைகளை அகற்றி துாய்மைபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

