/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தனியார் காட்டேஜ் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
/
தனியார் காட்டேஜ் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
தனியார் காட்டேஜ் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
தனியார் காட்டேஜ் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 02, 2024 11:54 PM
கோத்தகிரி;கோத்தகிரி சுப்ரமணியபுரம் பகுதியில் தனியார் காட்டேஜ்களில் இருந்து வெளியாகும் குப்பை குவியிலால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்டது சுப்ரமணியபுரம். இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கட்டபெட்டு - தும்மனட்டி வழித்தடத்தில் அமைந்துள்ள இப்பகுதி வழியாக, ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதியில் இருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பள்ளி வாகனங்கள் உட்பட, தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சுப்ரமணியபுரம் பகுதியை ஒட்டி, 50க்கும் மேற்பட்ட காட்டேஜ்களிலிருந்து, அன்றாடம் வெளியாகும் குப்பைகள், அங்குள்ள சாலையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால், பகுதி மக்களுக்கு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குப்பை குவியலால், பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், ''ஊட்டி, குன்னுார் மற்றும் கோத்தகிரி வழித்தடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
இங்குள்ள தனியார் காட்டேஜ்களில் இருந்து, அன்றாடம் வெளியாகும் கழிவுகள் சாலையில் கொட்டப்படுகின்றன. தவிர, மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவது தொடர்கிறது.
இதனால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தனியார் காட்டேஜ்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை, அப்புறப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.