/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை சோதனை சாவடிகளில் எஸ்.பி.,ஆய்வு
/
எல்லை சோதனை சாவடிகளில் எஸ்.பி.,ஆய்வு
ADDED : ஆக 26, 2024 02:06 AM
பந்தலுார்:நீலகிரி மாவட்ட, எல்லையோர சோதனை சாவடிகளில் எஸ்.பி.,ஆய்வு செய்தார்.
--- தமிழக-கேரள எல்லையாக பந்தலுார் பகுதி உள்ளது. இங்கு, 'பாட்டவயல், நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, மணல்வயல், மதுவந்தால், கோட்டூர்,' உள்ளிட்ட பல சோதனை சாவடிகள் அமைந்துள்ளது.
தற்போது, ஓணம் பண்டிகை சீசன் என்பதால், கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, எரிசாராயம் மற்றும் போதை பொருட்கள் கடத்தலை, தடுக்க தமிழக-- - கேரள மாநில போலீசார், மாநில எல்லை சோதனை சாவடிகளில் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா நேற்று மாநில எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். சோதனை சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் பாதுகாப்புகள், போலீசாரின் செயல்பாடுகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., க்கள், சரவணன், வசந்தகுமார் உட்பட போலீசார் உடன் இருந்தனர்.