/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகாலையில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்
/
அதிகாலையில் உலா வரும் சிறுத்தையால் அச்சம்
ADDED : மே 07, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று அதிகாலை, வண்டிச்சோலை எல்க்ஹில் பகுதியில் இருந்து கோத்தகிரி சாலை வழியாக சிறுத்தை ஒன்று சென்றது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே வந்த சிறுத்தை அதிகாலை நேரங்களிலும் உலா வருவதால் மக்கள் வெளியே செல்ல அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

