/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீரை தேடி குடியிருப்புக்கு வந்த காட்டெருமையால் அச்சம்
/
தண்ணீரை தேடி குடியிருப்புக்கு வந்த காட்டெருமையால் அச்சம்
தண்ணீரை தேடி குடியிருப்புக்கு வந்த காட்டெருமையால் அச்சம்
தண்ணீரை தேடி குடியிருப்புக்கு வந்த காட்டெருமையால் அச்சம்
ADDED : ஏப் 22, 2024 01:30 AM

குன்னுார்;குன்னுாரில் தண்ணீருக்காக காட்டெருமை நின்றதால், மக்கள் அச்சமடைந்தனர்.
குன்னுாரில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், வனப்பகுதிகளில் போதிய தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால், குடியிருப்பு பகுதிகளை நோக்கி காட்டெருமைகள் படையெடுக்க துவங்கியுள்ளது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த, 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வனப்பகுதிகளில் ஆங்காங்கே வனத்தீ ஏற்படுவதுடன் வறட்சி ஏற்பட்டு, உணவு, தண்ணீரை தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்கின்றன. நேற்று குன்னுாரில் அதிக வீடுகளும், குறுகிய சிறிய வழிகள் கொண்ட ரேலியா காம்பவுணட் பகுதிக்கு காட்டெருமை விசிட் செய்தது.
உணவு மற்றும் தண்ணீருக்காக வீடுகள் முன் நின்று தேடி சென்றது. காட்டெருமை தாக்கும் அச்சத்தில் மக்கள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர்.