/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
/
பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 03, 2024 05:36 AM

பெ.நா.பாளையம்: பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு குறித்து காணொளி திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில், கல்வியாளர் ரங்கசாமி, ஆசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழுவின் கடமைகள் குறித்து விளக்கினர். ஆசிரியை கீதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறை குறித்து விளக்கினார். விழாவில், ஆசிரியர்கள் குமரேசன், நந்தினி உள்ளிட்ட பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 70க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் முதல், 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு வரும், 10ம் தேதியும், மீதமுள்ள, 50 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு 17ம் தேதியும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 24ம் தேதியும், நடுநிலைப் பள்ளிகளுக்கு, 31ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.