/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் எமிஸில் பதிவேற்றும் பணி தீவிரம்
/
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் எமிஸில் பதிவேற்றும் பணி தீவிரம்
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் எமிஸில் பதிவேற்றும் பணி தீவிரம்
பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் எமிஸில் பதிவேற்றும் பணி தீவிரம்
ADDED : ஆக 26, 2024 01:16 AM
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள், 2022ம் ஆண்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டன. அவற்றின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, 2024--26 ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்து பள்ளி மேலாண்மை குழுக்கள், மறு கட்டமைப்பு செய்யப்படும் என, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதை ஒட்டி தமிழகம் முழுவதும் உள்ள, 37 ஆயிரத்து, 61 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், முதல் கட்டமாக, 12 ஆயிரத்து, 117 ஆரம்பப் பள்ளிகளில் கடந்த ஆக., 10ம் தேதி பள்ளி மேலாண்மை குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது கட்டமாக இம்மாதம் 17, 24ம் தேதிகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட்டன. இதற்காக பள்ளிகளுக்கு பெற்றோர், ஊராட்சி பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டனர்.
அதிக எண்ணிக்கையில் ஆதரவு பெற்ற பெற்றோர் உள்ளிட்டோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல தலைவர், துணைத் தலைவரும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி மறு கட்டமைப்பு ஆக., 31ம் தேதி நடக்கிறது. பள்ளி மேலாண்மை குழுவில் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் அடங்கிய, 24 பேர் கொண்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்ட குழுவில் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

