/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலம் கடந்து வரும் அரசு பஸ்கள் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
/
காலம் கடந்து வரும் அரசு பஸ்கள் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
காலம் கடந்து வரும் அரசு பஸ்கள் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
காலம் கடந்து வரும் அரசு பஸ்கள் பள்ளி மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஆக 09, 2024 01:50 AM

கோத்தகிரி:கோத்தகிரியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம், என்.பி.ஏ., பாலிடெக்னிக் உட்பட, 10க்கும் மேற்பட்ட, மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளில், மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
தவிர, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட, சொந்த தேவைகளுக்கு கோத்தகிரிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கோத்தகிரியில் இருந்து, குன்னுார் மற்றும் ஊட்டி வழித்தடங்களில் குறைந்தளவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான நேரங்களில் பஸ்கள் காலம் கடந்து வருகின்றன.
குறிப்பாக, காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில், பஸ்கள் தாமதமாக வருவது தொடர்கிறது. இதனால், மாணவர்கள் நீண்ட நேரம் கால் கடுக்க காத்திருந்து, முட்டி, மோதி இருக்கை பிடித்து பயணிக்கவேண்டிய நிலை உள்ளது.
அதில்,பள்ளி சிறுவர்கள் மற்றும் வயதானோர் இருக்கை கிடைக்காமல், அடுத்த பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, பள்ளி நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க, அரசு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.