/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் அமர முடியாமல் அவதி
/
பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் அமர முடியாமல் அவதி
பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் அமர முடியாமல் அவதி
பஸ் நிலையத்தில் இருக்கைகள் சேதம்: பயணிகள் அமர முடியாமல் அவதி
ADDED : ஏப் 12, 2024 01:11 AM

கோத்தகிரி;கோத்திகிரி பஸ் நிலையத்தில் இருக்கைகள் உடைந்துள்ளதால், பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், ஊட்டி, குன்னுார் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிக எண்ணிக்கையில், அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கிராமப்புறங்களில் இருந்து, மருத்துவம் மற்றும் கல்வி சம்பந்தமாக சமவெளி பகுதிகளுக்கு சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது.
இந்நிலையில், ஊட்டி மற்றும் கக்குச்சி பஸ் நிறுத்தத்தில் 50 பேர் அமரும் வகையில், பேரூராட்சி மூலமாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு வரிசை இருக்கைகள் உடைந்துள்ளது. இதனால், பயணிகள் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில், வெயில் மற்றும் மழை நேரங்களில் பயணிகள் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், உடைந்த இருக்கைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.