ADDED : பிப் 28, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு,; பாலக்காடு சந்திர நகர் அருகே, மயான பாதுகாப்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திர நகர் அருகே, முருத ரோடு ஊராட்சியின் பராமரிப்பில் உள்ளது மின் மயானம். இந்த மயான பகுதியிலுள்ள மரங்களை வெட்டி அகற்றி, 60 லட்சம்ரூபாய் செலவில் கழிவு சுத்திகரிப்பு மையம் அமைக்க ஊராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத்திட்டம் மயானத்தை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயான பாதுகாப்புக் குழுவினர் நேற்று மயானம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்று, கழிவு சுத்திகரிப்பு மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி பேசினர்.