ADDED : ஜூன் 17, 2026 05:30 PM
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை ஒட்டி, 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த பல ஆயிரம் மலர்கள் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. 25 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டன.
பூங்காவில், 2வது சீசன் நடப்பாண்டு செப்., மாதம் நடந்தது. தற்போது சீசன் நிறைவு பெற்ற நிலையில்,இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்றுகள் உற்பத்தி செய்வதற்காக செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதில், ‘சால்வியா, மேரிகோல்டு, சூரியகாந்தி, டெல்பீனியம்,ஆஸ்டர், ஜீனியா,’உள்ளிட்ட மலர் செடிகளில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் விதைகளை தரம் பிரித்து காய வைக்க உள்ளனர். அதன்பின் நாற்றுகள் தயார் செய்யப்பட்டு, பூங்காவில் நடவு செய்யவும் சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
