/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'விதை நேர்த்தி செய்தால் நோய் பரவல் தடுக்கலாம்'
/
'விதை நேர்த்தி செய்தால் நோய் பரவல் தடுக்கலாம்'
ADDED : செப் 04, 2024 12:49 AM
சூலுார்:'விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக, பயிர்களில் நோய் பரவுவதை தடுக்கலாம்' என, மத்திய பயிர் பாதுகாப்பு மைய உதவி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய பயிர் பாதுகாப்பு மையத்தின், உதவி பயிர் பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி கூறியதாவது:
விதை நேர்த்தி என்பது பூஞ்சாணக்கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றை, தனித்தோ அல்லது ஒருங்கிணைத்தோ விதைகளின் மேல் இடுவதன் மூலம், மண் மூலம் பரவும் நோய்களில் இருந்து காப்பாற்றலாம்.
சேமிப்பு விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாத்து, தொற்று நீக்குதலே விதை நேர்த்தி ஆகும்.
விதை நேர்த்தி செய்வதால், பயிர்களை நோய்கள் தாக்காமல் காக்கலாம். விதை அழுகல், நாற்று அழுகல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கலாம். முளைப்பு திறன் மேம்படும். சேமிப்பு விதைகள் பாதுகாக்கப்படும். மண்ணில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.