/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கைப்பற்றப்பட்ட பணம் உரிய ஆய்வு அவசியம்
/
கைப்பற்றப்பட்ட பணம் உரிய ஆய்வு அவசியம்
ADDED : செப் 17, 2024 05:23 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே, சேரம்பாடியில் கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், சங்க செயலாளர் அகிலேஷ் பேசியதாவது:
கடந்த, 11ஆம் தேதி சேரங்கோடு ஊராட்சியில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்ததில், கணக்கில் வராத பணம் என்று கூறி, 3 லட்சத்து 58 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
விசாரணியில், '12ஆம் தேதி ஊராட்சியில், 70 வேலைகளுக்கான டெண்டர் விடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக ஊராட்சியில் பதிவு செய்துள்ள, 79 ஒப்பந்ததாரர்கள், டெண்டரில் பங்கேற்பதற்காக, முன் வைப்பு தொகை மற்றும் டேவணி தொகை செலுத்தப்பட்டது.
ஊராட்சியில் குறைவான பணியாளர்கள் மற்றும் நெட்வொர்க் சேவை குறைபாடு காரணமாக, இதற்கான பில்களை உடனடியாக கம்பியூட்டரில், பதிவேற்றம் செய்ய இயலவில்லை. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, கணக்கில் வராத பணம் என, தெரிவித்துள்ளனர்,' என, கூறப்பட்டுள்ளது. அலுவலகத்தில், 'சிசிடிவி' கேமரா உள்ள நிலையில், அதனை ஆய்வு செய்து, ஒப்பந்ததாரர்கள் செலுத்திய தொகையினை கணக்கீடு செய்தால் உண்மை தெரிய வரும்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இது குறித்து முறையான ஆய்வு மேற்கொண்டு, ஒப்பந்ததாரர்கள் செலுத்திய தொகையினை திரும்ப ஊராட்சியில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக டெண்டர் நடத்தப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், பொருளாளர் பேபி, நிர்வாகிகள் கலாம், பாலசிங்கம், ஷாஜி உள்ளிட்ட,79 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர்.