/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தபால் துறையில் பதவி உயர்வுக்கான தேர்வு; ஏராளமானோர் பங்கேற்பு
/
தபால் துறையில் பதவி உயர்வுக்கான தேர்வு; ஏராளமானோர் பங்கேற்பு
தபால் துறையில் பதவி உயர்வுக்கான தேர்வு; ஏராளமானோர் பங்கேற்பு
தபால் துறையில் பதவி உயர்வுக்கான தேர்வு; ஏராளமானோர் பங்கேற்பு
ADDED : ஆக 27, 2024 01:22 AM
கோவை;மேற்கு மண்டலத்துக்குட்பட்ட தபால் துறை பதவி உயர்வுக்கான தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேற்கு மண்டலத்துக்குட்பட்ட தபால் துறையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களாக (ஜி.டி.எஸ்.,-கிராமிய டாக் சேவக்) மற்றும் எம்.டி.எஸ்.,(மல்டி டாஸ்க் ஸ்டாப்) பணியாளர்களும் அடங்குவர். குறிப்பிட்ட இடைவெளியில் இவர்களின் பதவி உயர்வுக்கான தேர்வுகள் தபால் துறை சார்பில் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக ஜி.டி.எஸ்., பணியில் இருந்து எம்.டி.எஸ்., மற்றும் எம்.டி.எஸ்., பணியில் இருந்த தபால்காரராக பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு நேற்று நடந்தது.
மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட தபால் துறையில் பணிபுரிவோருக்கான இந்த பதவி உயர்வு தேர்வு கோவையில், ஜி.டி., பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட், வேளாண் பல்கலை ஆகிய மூன்று மையங்களில் நடந்தது.மொத்தம், 1,400 பேர் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தனர். தேர்வு காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடந்தது. இத்தேர்வில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கோவை மண்டல தபால் துறை சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

